Siguenos
iBookstore
Android app on Google Play
Like Us
Un programa de
தூசைக் கவ்வும் விண்மீன்கள்
26 de March de 2020

கேக் செய்யும்போது மா, சீனி போன்றவை சுவையான கேக் உருவாக்க முக்கியமான சேர்மானங்களாகும். அதேபோல விண்வெளியிலும் பிரபஞ்ச தூசு விண்மீன்கள் உருவாக முக்கிய சேர்மானமாகும்.

விண்மீன்கள் உருவாகத் தேவையான மற்றுமொரு சேர்மானமான வாயுவைப் போலல்லாது இந்த தூசு விண்மீனின் எரிபொருளாக பயன்படுவதில்லை. ஆனாலும் இவையின்றி விண்மீன்கள் உருவாகாது. இதற்கு காரணம் விண்மீன்கள் போதுமானளவு அடர்த்தியான இடத்தில்தான் உருவாகும். இங்கேதான் இந்த பிரபஞ்சத்தூசு உதவுகிறது - விண்மீனின் அடர்த்தியை இது அதிகரிக்கிறது.

வாயுக்கள் மற்றும் தூசுகள் நிறைந்த விண்மீன்கள் உருவாகும் பிரதேசத்தை பற்றி தெளிவாக ஆய்வுசெய்ய ஜப்பானிய விஞ்ஞானிகள் புதிய பிரபஞ்ச வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது எமக்கு அருகில் இருக்கும் மூன்று வாயுப் படலங்களை மிகத்துல்லியமாக பிரதிபலிக்கிறது. அதிலொன்றான M17 எனப்படும் வாயுப் படலத்தை நீங்கள் படத்தில் பார்க்கலாம். இந்த வரைபடத் திட்டம் "விண்மீன் உருவாக்க திட்டத்தில்" ஒரு அங்கமே. இத்திட்டம் விண்மீன்கள் எப்படி உருவாகின்றன என்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதவும்.

சிலவேளைகளில் தொலைநோக்கிகள் வெறும் கண்களால் பார்க்கமுடியாதவற்றை காட்டும். இந்தப் பிரபஞ்சத்தில் பல விண்மீன் பேரடைகள் தூசுப்படலங்களுக்கு பின்னால் மறைந்துள்ளன. இந்தத் தூசுப்படலங்கள் இவ்விண்மீன் பேரடைகளை நாம் அவதானிப்பதை தடுக்கின்றன. எனவே தூசுகளுக்கு உள்ளாக பார்ப்பதற்கு விசேடமான கற்புலனாகாத ஒளியை இந்த விண்ணியலாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதுதான் ரேடியோ அலை. ரேடியோ அலைகள் அடர்த்தியான தூசுகளுக்குள் பயணித்து எமது தொலைநோக்கியை வந்தடையும். இதன் காரணமாகவே தூசு மற்றும் வாயு மண்டலங்களை அவதானிக்க ரேடியோ தொலைநோக்கிகள் சிறந்ததாக அமைகிறது.

படவுதவி: NASA, Holland Ford (JHU), the ACS Science Team and ESA

ஆர்வக்குறிப்பு

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள M17 எனும் பிரதேசம் நமது சூரியத் தொகுதியை போல 3500 மடங்கு பெரியதாகும்!

M Srisaravana, UNAWE Sri Lanka

Share:

More news
14 September 2020
10 September 2020
3 September 2020

Fotografías


Printer-friendly

PDF File
1010,3 KB